டெல்லி, அரியானாவில் நிலநடுக்கம்..வீடுகளை விட்டு அலறியடித்து ஓடிய மக்கள்..!

டெல்லி மற்றும் புறநகரில் இன்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹரியானா மாநிலம் ரோட்டைக்கை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

டெல்லி, மே-29

அரியானா மாநிலம் ரோதக் என்ற இடத்தில் இன்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரோதக்கில் இருந்து கிழக்கு – தென்கிழக்கு பகுதியில் 16 கிலோ மீட்டர் தொலைவில் 3.3 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் பக்கத்து மாநிலமான டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அச்சத்தால் வீட்டில் இருந்து வெளியே அலறிடித்து ஓடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *