நீரிழிவு, ரத்தக் கொதிப்புப் போன்ற உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் ரயில் பயணத்தைத் தவிருங்கள்.. ரயில்வே வாரியம்

ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இல்லாமல் ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

டெல்லி, மே-29

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் திரும்ப சிறப்பு ரெயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ரெயில் நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், நோய் தொற்று இருப்பவர்கள் பயணம் செய்யக்கூடாது. பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனை செய்யப்படும் என பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், ரயிலில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கு சில அறிவுறுத்தல்களை இந்திய ரயில்வே இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட உடல் நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அவசியம் இல்லாமல் ரயில் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். கர்ப்பிணிகள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட சிறார்கள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் ரயில் பயணத்தைத் தவிர்க்கலாம்.

புலம்பெயர் தொழிலாளர்கள் சிலர், உடல்நலப் பிரச்னைகளோடு ரயிலில் பயணிக்கும் போது சில அசம்பாவிதங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தலை ரயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும், உடல் நலக் குறைபாடுகளுடன் ரயிலில் பயணிக்கும் போது சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. எனவே அதை தவிர்க்க மேற்கொண்ட அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.

கட்டாயமாக பயணம் செய்தே ஆக வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் மட்டுமே பயணம் செய்யலாம் என ரெயில்வே வாரியம் சேர்மன் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *