நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதும் பிரதமர் மோடி..! அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என தகவல்

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுத உள்ளார்; அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை அனைத்து செய்தித் தாள்களிலும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

டெல்லி, மே-29

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,333-லிருந்து 1,65,799-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,531-லிருந்து 4,706-ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாளுடன் (மே 31-ந்தேதி) முடிவுக்கு வருகிறது. அதன்பின் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து இன்று பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதுகிறார். அனைத்து மொழிகளிலும் அந்த கடிதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை அனைத்து செய்தித்தாள்களிலும் மோடி கடிதம் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *