தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 20 ஆயிரத்தைத் தாண்டியது..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை, மே-29

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

  • தமிழகத்தில் புதிதாக 874 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டோர் 733. பிற மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டோர் 141. சென்னையில் மட்டும் இன்று உறுதி செய்யப்பட்டோர் 618. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 11,313 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 765 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 154-ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 13,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 71 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,776 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 4,66,550 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.74% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 55.87% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,334 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 874 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 12,737 ஆண்கள், 7,504 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *