பிக்பாஸ் டைட்டில் வின்னர்: முகேன் ராவ்

அக்டோபர்-05

பிக்பாஸ் நிகழ்ச்சி

சென்னையில் உள்ள தனியார் தொலைகாட்சி ஒன்று பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை 3 சீசன்களாக நடத்தி வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த நிகழ்ச்சிக்கு தீவிர ரசிகர்கள். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 100 நாட்கள் அப்படி அந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கும்?  தங்களது குடும்பத்தோடும், வெளி உலகத்தோடும் எந்தவித தொடர்பும் இல்லாமல் போட்டியாளர்கள் 100 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான குணாதிசியங்கள் இருந்தாலும், அவர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸ் வுடன் பழகும் விதம், நடந்துகொள்ளும் முறைகள், போட்டியில் செலுத்தும் கவனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, வாரந்தோறும் எலிமினேட் செய்யப்படுவார்கள், அதாவது போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த போட்டியை பார்க்கும் மக்கள் ஒவ்வொரு வாரமும் வோட் செய்து, தமக்கு விருப்பமான போட்டியாளர்களை வீட்டில் தக்க வைத்துக்கொள்ளலாம்.

போட்டியாளர்கள் தேர்வு

இந்த நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற பகுதிகளிலும்கூட பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். போட்டியாளர்களை தேர்வு செய்வதில் கூட நுணுக்கமாக தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் இந்த பிக்பாஸ்-3 ல் 16 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றனர். வனிதா, தர்ஷன், லாஸ்லியா, கவின், அபிராமி, பாத்திமா பாபு, முகேன் ராவ், சாண்டி, ஷெரின், ஷாக்ஸி, சேரன், மீரா மிதுன், கஸ்தூரி, மோகன் வைத்யா உள்ளிட்டோர் அந்த போட்டியில் பங்கேற்றனர்.

வீட்டில் என்ன நடக்கும்?

ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்படும், போட்டியாளர்கள் எவ்வாறு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை செய்கிறார்கள், மதிப்பெண்கள் எவ்வளவு எடுக்கிறார்கள் என்பது குறித்து கணக்கெடுக்கப்படும். போட்டியாளர்களின் குணங்களும் இதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. ஹவுஸ்மேட்ஸ் அழுகை, சிரிப்பு, கோபம், சோகம், என எல்லாமே காட்சிப்படுத்தப்படும்.

தற்போது இருக்கும் போட்டியாளர்கள்?

ஒவ்வொரு வாரமும் சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர்களை மக்கள் வோட் செய்து தேர்வு செய்யலாம், 16 பேர் பங்கேற்ற நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தை எட்டியுள்ளனர். சாண்டி, முகேன், ஷெரின், லாஸ்லியா ஆகியோர் மட்டுமே பிக்பாஸின் இறுதிபோட்டியில் பங்கேற்கவுள்ளனர். அக்டோபர் 6-ம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவு பெறவுள்ளது. தமிழக மக்கள் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

யார் இறுதி வெற்றியாளர்?

தற்போது இருக்கும் நான்கு போட்டியாளர்களில் முகேன் ராவ் தான் பிக்பாஸின் டைட்டில் வின்னர் என கூறப்படுகிறது. பெரும்பலான தமிழக மக்கள் சாண்டி அந்த போட்டியில் வெற்றிபெறவேண்டும் என விரும்புகிறார்கள். ஆனால், முகேனை வெற்றியாளர்களாக அறிவிக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளது. இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் நான்கு பேருக்கும் மக்களிடையே சீரான ஆதரவு இருந்து வருகிறது.

முகேனை தேர்வு செய்யும் பின்னணி?

தமிழகத்தை சேர்ந்த சாண்டியை வெற்றியாளராக தேர்வு செய்யாமல், மலேசியாவை சேர்ந்த முகேனை தேர்வு செய்வதற்கான பின்னணிகள் நிறைய இருக்கிறது. மலேசியா நாட்டில் இருந்து வந்த முகேன் ஒரு பாடகர். அவருக்கு மலேசியாவில் பெரும் ஆதரவு இருக்கிறது. தமிழகத்தில் அவரை வெற்றிபெறச் செய்து, அடுத்த பிக்பாஸ் சீசனை மலேசியாவில் நடத்த அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முகேனுக்கு தமிழகத்தில் ரசிகர்களின் ஆதரவு இருந்தாலும்கூட அவர் வின்னராவதற்கு இதுவே முக்கிய காரணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *