மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது.. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

மாஞ்சா நூலில் பட்டம் விட்டால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னை, மே-29

தமிழகத்தில் மாஞ்சா நூல் பட்டம் விடுவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. ஆனால் அதனையும் மீறி சிலர் பட்டம் விடுவதால் சில நேரங்களில் பட்டத்தின் கயிறு சாலைகளில் செல்வோரின் கழுத்தை நெரித்து உயிரிழப்பும் ஏற்படுகிறது.

சென்னையில் மாஞ்சா நூல் கட்டி பட்டம் விடுவதால் அசம்பாவிதங்கள், உயிரிழப்புகள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சிறுவர்களும், இளைஞர்களும் மாஞ்சா நூலில் பட்டம் விட தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சென்னையில் மாஞ்சா நூல் மூலம் பட்டம் விடுபவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் விட்ட 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மாஞ்சா நூல்களை கட்டி பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *