அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை.. ஊரடங்கு நீட்டிப்பு பற்றி முக்கிய முடிவு..

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் வேறு தளர்வுகள் அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை 10 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, மே-29

தமிழகத்தில் வரும் 31-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைகிறது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், தற்போது கொரோனா பரவல் நிலை குறித்து, முதல்வர் ஆய்வு செய்வதுடன், ஊரடங்கை தளர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து, நாளை மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்கவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் பொது முடக்கம் குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *