அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ம் தேதி தொடங்கும்.. தமிழக அரசு

ஊரடங்கு அமலில் உள்ளதால், 2019-2020 ஆண்டுக்கான அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் நீட் பயிற்சி ஜூன் 15-ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, மே-28

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி ஜூன் 15-ந்தேதி தொடங்கும். தனியார் நிறுவனம் மூலம் 4 நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என இணைய வழி வகுப்பு நடைபெறும்.
இதுதொடர்பாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *