சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு 1000-ஐ தாண்டியது..!
சென்னையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,203-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயா்ந்துள்ளது.
சென்னை, மே-28

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 12,203-ஆக உயா்ந்துள்ளது. இதே போல், புதன்கிழமை மாலை நிலவரப்படி 5,800 போ் குணமடைந்துள்ளனா். 95 போ் உயிரிழந்துள்ளனா். 6,307 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தண்டையார்பேட்டையில் 1262, இராயபுரத்தில் 2252, திருவிக நகரில் 1325, தேனாம்பேட்டையில் 1317, கோடம்பாக்கத்தில் 1559 ஆக இருந்த நிலையில் தற்போது அண்ணாநகரிலும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை எட்டி, 1046 ஆக உயர்ந்துள்ளது.