தமிழ் வழி பிளஸ் 2 வேதியியல் தேர்வில் மொழிபெயர்ப்பு தவறால் 3 மதிப்பெண்கள் போனஸ்… அரசு தேர்வுகள் இயக்ககம்

பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி தேர்வெழுதிய மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தேர்வு வினாத்தாளில் கேள்வி ஒன்றில் மொழிபெயர்ப்பில் தவறு இருந்ததால் 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும். மாணவர்கள் கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 3 மதிப்பெண்கள் உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே-28

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடந்து முடிந்தது. ஊரடங்கு உத்தரவால் விடைத்தாள் திருத்தும் பணி தள்ளி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சென்னை தவிர பிற பகுதிகளில் நேற்று முதல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

இந்நிலையில் பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தமிழ் வழி மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் வினாத்தாள் கேள்வி ஒன்றில் புரதம் என்ற தமிழ் சொல்லுக்கு பதிலாக புரோட்டின் என ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து வழங்கியதால் மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *