சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே எழுதிக்கொள்ளலாம் என அறிவிப்பு..

10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் ஊர்களிலேயே தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

டெல்லி, மே-27

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதையடுத்து, ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 10 மற்றும்12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம் என மத்திய மனித வள அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறியிருந்தாலும் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைவரும் தாங்கள் இருந்த இடங்களில் இருந்து சொந்த ஊருக்கோ, வேறு மாவட்டம் அல்லது மாநிலங்களுக்கோ சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விடுத்துள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத வர முடியாத சூழல் நிலவிய நிலையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு மணவர்கள், தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்லத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *