கேரளாவில் 2 மாதத்திற்குப் பின்பு நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு..

கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம், மே-27

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கேரள மாநிலத்தில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து ஆன் லைனில் மது விற்பனை செய்ய அம்மாநில அரசு இடையில் தீர்மானித்தது. ஆனால் இதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் நாளை முதல் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும். ஆனால் மது வாங்குவதற்குக் காலை 6 மணியிலிருந்து 10 மணிக்குள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் டோக்கன் இல்லாதவர்களுக்கு மது வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அம்மாநில அரசு BEVCO என்ற ஆப்பை உருவாக்கியுள்ளது. இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்து மது குடிப்போர் முன்பதிவு செய்து டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டோக்கனில் மது வாங்கும் நேரமும் தெரிவிக்கப்பட்டிருக்கும். எனவே அந்த நேரத்தில் மட்டும் மதுக்கடைகளுக்குச் சென்று மது வாங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்ய முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *