தமிழகத்தில் ஒரே நாளில் 817 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 18,545-ஆக உயர்வு..

தமிழகத்தில் மேலும் 817 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 18,545-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மே-27

தமிழகத்தில் புதிதாக 817 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 558 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் மட்டும் இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டோர் 678. இதுதவிரத்து மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பியவர்களில் 138 பேருக்கும், கேரளத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும் கொரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 9,909 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 567 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 133-ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் 21 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 558 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 12,203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 70 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 4,42,970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.71% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 53.43% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,231 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 817 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11,725 ஆண்கள், 6,815 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *