கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.51 லட்சமாக உயர்வு.. 4337 பேர் பலி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, மே-27

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 151767 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6387 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4337 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 64426 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,792 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 16,954 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 17,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9342 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 14,465 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 915 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7139 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *