7 தமிழர்கள் விடுதலையில் மேலும் சிக்கல்

சென்னை ஆகஸ்ட் 29

தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் கைதிகளாக, 27 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். முக்கிய அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுனர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காமல் உள்ளார்.தமிழக அரசியல் கட்சிகள் எத்தனை முறையோ கோஷங்கள் எழுப்பினாலும் புரோகித் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில் நளினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் படி 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, சரவணன் அமர்வு, இன்று நளினியின் மனுவை தள்ளுபடி செய்தது.இதனால் நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *