புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை மத்திய, மாநில அரசுகளின் தோல்வி.. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஊரடங்கு நடவடிக்கையால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி, மே-26

ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்துள்ள பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. இது குறித்து வரும் 28-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது ;-

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சிக்கி இருக்கக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்ந்து தங்களது மாநிலங்களுக்கும், தங்களது கிராமங்களுக்கும் நடந்தும், சைக்கிளிலும் போவதை பார்க்க முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை தான் இது தெளிவாக காட்டுகிறது.

இவர்களுக்குத் தேவையான உணவு அல்லது தங்கும் இடமோ செய்து தருவதற்கு கூட மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இது சரியான நேரம் மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதை ஒரு மிகப் பெரிய தோல்வியாக தான் நாங்கள் பார்க்கிறோம். இவர்களை காப்பாற்றுவதற்கு தேவையான இலவச போக்குவரத்து வசதி, இலவச உணவு, இருப்பிடம் ஆகியவை செய்வதற்கு மத்திய அரசு தவறிவிட்டது. இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துளீர்கள்?

வரும் வியாழக்கிழமை மத்திய அரசு இது சம்பந்தமான விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *