ஊரடங்கை தளர்த்தினால் மோசமான விளைவுகள் ஏற்படும்.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால் தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

மே-26

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை பிரிவு தலைவரான மைக் ரேயான் தெரிவித்துள்ளதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை எட்டும் நிலையில் உள்ளது. 3.40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சில நாடுகளில் கொரோனா தொற்று இறங்குமுகமாக உள்ளதால் முற்றிலும் ஒழிந்து விடும் என நாம் ஊகிக்க வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று முழுவதுமாக ஒழியாத நிலையில், அது மீண்டும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும்.

தற்போது நாம் இரண்டாவது அலையில் இல்லை. உலகம் முழுவதும் கரோனாவின் முதல் அலையின் நடுமத்தியப் பகுதியில்தான் இருக்கிறோம்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்திலேயே அதன் இரண்டாவது உச்சநிலையை அனைத்து நாடுகளும் சந்திக்க நேரிடும். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *