சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமனம்

சென்னை: சிபிசிஐடி இயக்குநராக இருந்த ஜாபர் சேட் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜாபர் சேட்டுக்கு பதில் பிரதீப் வி.பிலிப்பை சிபிசிஐடி டிஜிபியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, மே-26

1986 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் 1990 ஆம் ஆண்டு சென்னை கூடுதல் எஸ்.பி.ஆக பணியில் சேர்ந்தவர்.
2019ம் ஆண்டு சிபிசிஐடி இயக்குனராக ஜாபர் சேட் நியமிக்கப்பட்டார்.

ஜாபர் சேட் சிபிசிஐடி டி.ஜி.பி.யாக பொறுப்பேற்ற பின்னர், நீட் தேர்வு முறைகேடு, சமூக ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கு, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வந்தார்.

வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், ஜாபர் சேட் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் பிரிவின் டிஜிபியாக இருந்த பிரதீப் வி.பிலிப், தற்போது சிபிசிஐடியின் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *