தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா.. ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை, மே-26

இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது ;-

  • தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,728-ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 611 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 127-ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் 20 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 11,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 8,256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.71% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 52.69% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,289 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 646 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 11,217 ஆண்கள், 6,506 பெண்கள், 5 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *