பஞ்சமி நிலம் பற்றி திமுகவிடம் கேட்டீங்களா? வாயிலேயே வடை சுடுகிறார்.. திருமாவை சீண்டிய காயத்ரி ரகுராம்..!

“பஞ்சமி நிலம் பற்றி இதுவரைக்கும் திமுகவிடம் ஒரு கேள்வி கேட்டாங்களா? வாயிலேயே வடை சுட்டு தனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறார் திருமாவளவன்” என்று காயத்ரி ரகுராம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

சென்னை, மே-26

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பாஜகவிற்கு பத்து கேள்விகள் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.. இந்த வீடியோ மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.. பாஜகவினருக்கு இது கொதிப்பை ஏற்படுத்தி, கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இது சம்பந்தமாக பாஜக ஆதரவாளர் காயத்ரி ரகுராம் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இப்போது எம்பியாக இருக்கும் திருமாவளவனால் எதுவுமே செய்ய முடியவில்லை.. அவரை நம்பி இருப்பவர்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளார்… அவர் பஞ்சமி நிலம் பற்றியோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனை பற்றி திமுகவிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை… வாயிலேயே வடை சுட்டு தனது தோல்விகளை ஒப்புக்கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு விசிகவினர் காயத்ரிக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *