நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது குறித்து வினாடி வினா – இணையத்தில் கலக்கும் அமைச்சர் S.P. வேலுமணி

சென்னை, மே-26

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக மக்களின் மனநிலை மற்றும் அவர்களின் கருத்துக்களை அறிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P. வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு கேள்விகளுடன் அண்மையில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில் பலர் பங்கேற்று தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இது ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடித்தன. கொரோனா வைரஸை தடுக்க வீட்டுக்கு வெளியே என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாகியுள்ள நிலையில், பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் மருந்துகள், உணவுகள், பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் S.P.வேலுமணி தமது www.namakaagaspv.com என்ற இணையதளத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது குறித்த வினாடி வினாவை தொடங்கி இருக்கிறார். இதற்கான இணைப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில், எந்த சித்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த ஆயுர்வேத மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த உணவு வகைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த உணவு வகைகள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.? எந்த பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது ? எந்த ஊட்டச்சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றன ? என மொத்தம் 6 கேள்விகள் இடம் பெற்று இருக்கின்றன.

ஒவ்வொரு கேள்விக்கும் 3 விடைகள் இடம் பெறும். அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இறுதியில் எத்தனை மதிப்பெண்கள் கிடைத்தது என்ற முடிவு வெளியாகும். கேள்விகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக இணைய வாசிகள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் 100 மதிப்பெண்கள் வென்று, அதனை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தனிப்பட்ட முறையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலுமணி தமது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *