இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1. 45 லட்சமாக உயர்வு.. 4021 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரசால் 1.45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4167 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, மே-26

நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலில், இந்தியாவில் கொரோனாவால் நேற்று வரை 138,845 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அந்த பாதிப்பு 1,45,380ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 4,167 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து 60,490 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,722ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 146 பேர் பலியாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டித்தில் 52,667 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 1,695 பேர் பலியாகியுள்ள நிலையில், 15,786 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் 17,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8731 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 14,460 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 888 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6636 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *