விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு மட்டும் அனுமதி.. உச்சநீதிமன்றம் உத்தரவு

சர்வதேச விமானங்களில் அடுத்த 10 நாட்களுக்கு நடு இருக்கையை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டெல்லி, மே-25

வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை என விமானி தேவன் கனானி, மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், அரசு விதிமுறைகளின்படி நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் ஏர் இந்தியா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஏர் இந்தியா மற்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர அப்பீல் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, அடுத்த 10 நாட்களுக்கு திட்டமிடப்படாத சர்வதேச விமானங்களில் (சிறப்பு விமானங்கள்) நடு இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *