மனைவி மீது விஷப்பாம்பை ஏவி விட்ட கொன்ற கணவன்..! கேரளாவில் ஷாக்..

கேரளத்தில் பாம்பைக் கடிக்கவிட்டு மனைவியைக் கொன்ற கணவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவனந்தபுரம், மே-25

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. இவரது கணவர் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது.. பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களில் ஏற்கெனவே ஒரு முறை பாம்புக் கடித்துத் தப்பிய உத்ரா, இரண்டாவது முறையாகவும் பாம்பு கடித்ததால் இறந்தார். பெண்ணைப் பாம்பு கடிக்கச் செய்ததற்குக் காரணம் கணவனே என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாம்பு கடித்து தனது மகள் உயிரிழந்த சம்பவத்தில் ஏதோ சந்தேகம் இருப்பதாக, மகளின் தந்தை காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், சொத்துக்கு ஆசைப்பட்டு மனைவியைக் கணவரே பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுபற்றிய வழக்கை விசாரித்த காவல்துறையினர் கூறுகையில், 25 வயது உத்ரா கொலை வழக்கில் பெண்ணின் கணவர், பாம்பாட்டி மற்றும் ஒரு கூட்டாளி என மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

விசாரணையில், தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தவரான உத்ராவின் கணவர் சூரஜ்தான், ரூ.10 ஆயிரம் கொடுத்து பாம்பாட்டியிடம் இருந்து பாம்பை வாங்கி வந்து உத்ராவைக் கடிக்கவிட்டுக் கொலை செய்தது தெரிய வந்தது. முதல் முறை வீட்டுக்குள் பாம்பை விட்டு உத்ராவைக் கடிக்க வைத்தபோது அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தப்பித்துவிட்டார். மீண்டும் அதே பாணியில் முயன்று உத்ராவைக் கொலை செய்துள்ளார் சூரஜ்.

உத்ராவின் நகை மீதுதான் சூரஜ்-க்கு மொத்த கவனமும் இருந்துள்ளது. அவருக்கு தெரியாமல் பேங் லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்திருக்கிறார்.. இந்த விஷயம் உத்ராவுக்கு தெரிந்து சண்டை போட்டுள்ளார்.. இதுதான் இவர்களுக்குள் பிரச்சனையாக இருந்திருக்கிது. ஏற்கனவே ஒருமுறை மனைவியை கொல்ல முயன்றதும் இதற்காகத்தான். அந்த முயற்சி தோல்வி அடையவும், 2வது முறையாக ஒரு விஷ பாம்பை 10 ஆயிரம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்து மனைவியை கொன்றுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான உத்ரா – சூரஜ் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *