தமிழகத்தில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா.. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,082 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மே-25

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது;-

  • தமிழகத்தில் இன்று 805 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 17,082 ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 407 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 549 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 11,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 68 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 7,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 4,21,480 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 93 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.69% ஆக உள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • உயிரிழந்தவர்களில் 50 சதவீதத்திற்கும் மேலானோர் முதியவர்கள் ஆவர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 88% பேருக்கு அறிகுறியே இல்லை. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 12% பேருக்கு மட்டுமே அறிகுறி இருந்தது.
  • தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் தலா 100-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 51.11% ஆக உள்ளது.
  • வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;
    மகாராஷ்டிரா – 87, குஜராத் – 3, கேரளா – 2, ஆந்திரா – 1.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *