தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை, மே-25

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 31 ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு எந்த நிலையில் உள்ளது, ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து நாளை சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தற்போதைய நிலையில், பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்துவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *