துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி.. நேரில் சென்று நலம் விசாரித்த எடப்பாடியார்..!

வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சென்னை, மே-25

தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது வழக்கமான பரிசோதனை என்றும், மருத்துவ பரிசோதனை முடிந்து இன்று மாலையே வீடு திரும்புவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடன் தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் சென்றார்.

வழக்கமான மருத்துவப் பரிசோதனை முடித்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *