இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 4000-ஐ கடந்தது..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,31,868-லிருந்து 1,38,845-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,867-லிருந்து 4,021-ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, மே-25

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 6,767 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,31,868-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் 147 போ் உயிரிழந்ததை தொடா்ந்து மொத்த பலி எண்ணிக்கை 3,867-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 1,38,845 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *