சென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

சென்னையில் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

சென்னை, மே-24

தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 765 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 10,576 ஆக அதிகரித்துள்ளது. இன்று செங்கல்பட்டில் 46 பேரும், திருவள்ளூரில் 34 பேரும், காஞ்சிபுரத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் அதிகபட்ச பாதிப்பாக கள்ளக்குறிச்சியில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதையை நிலவரப்படி 10,576 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 4,844 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 5,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கரோனாவுக்கு 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *