தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 16,277 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை, மே-24

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்டவை குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், தமிழகத்தில் மட்டும் 718 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிறமாநிலங்கள் மற்றும் பிறநாடுகளிலிருந்து வந்த 47 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 16,277 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் பலியானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 833 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,324 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் மொத்தம் 7,839 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இன்று மொத்தம் பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 587 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *