புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு.. மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு..

புதுச்சேரியில் நாளை முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும். நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, மே-24

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்படும் என்றும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்திற்கு 20% கொரோனா வரி விதித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே விலைக்கு மது விற்பனை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

நாளை(திங்கள்) முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மதுபானங்களை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து மது வாங்க யாரும் புதுச்சேரிக்கு வரக்கூடாது. மதுபானங்கள் மீது 25% வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. சாராயத்துக்கும் 20% வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *