தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 15,512- ஆக உயர்வு..

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, மே-23

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 759 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 491 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 9,989 பேருக்கும், பிற மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5,523 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *