பல்டி அடித்தாலும் கமலால் ஆட்சி அமைக்க முடியாது-ஜெயக்குமார்

சென்னை, அக்டோபர்-04

தோப்புக்கரணம் போட்டு, பல்டி அடித்தாலும் கமலால் ஆட்சி அமைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் அவர்களை வரவேற்பது என்பது தமிழர் பண்பாடு என்றும், நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும் என்றும் கூறினார். என்ன தோப்புக் கரணம் போட்டாலும், பல்டி அடித்தாலும் கமலால் ஆட்சி அமைக்க முடியாது என்றும், அதிமுக அரசை விமர்சித்து காலத்தை கடத்தி விடலாம் என கமல் நினைப்பதாகவும் ஜெயக்குமார் பதிலளித்தார். ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை நிச்சயம் வெற்றி பெறுவார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *