சென்னை ராயபுரத்தில் 2000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு..!

சென்னையில், கொரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 9,364-ஆக அதிகரித்துள்ளது. ராயபுரம், திருவிக நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய நான்கு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு தலா ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

சென்னை, மே-23

சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் 569 பேருக்கு, கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 9,364-ஆக உயா்ந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில்தான் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ராயபுரம் மண்டலத்தில், 1,768 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,300 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *