இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,25,101-ஆக உயர்வு.. இதுவரை 3,720 பேர் பலி..

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,447-லிருந்து 1,25,101-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,583-லிருந்து 3,720-ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி, மே-23

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 125101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6654 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 137 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3720 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 51784 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 44,582 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,517 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 12,583 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 98 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7128 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 13,268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 802 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5880 பேர் குணமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *