ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எச்.ராஜா வரவேற்பு.. அடுத்து தயாநிதி மாறன்தானா? என கேள்வி..

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-23

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என கூறியிருந்தார். தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பாரதிய ஜனதா செயலாளர் எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:-

“திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது. வரவேற்கத்தக்கது. அடுத்து தயாநிதிமாறன் in Waiting list?.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *