நான்கு சர்வதேச விருதுகளை பெற்ற ராட்சசன் திரைப்படம்!!!

அக்டோபர்-04

திரில்லர் படமான ராட்சசன் நான்கு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளது.

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோரது நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான த்ரில்லர் திரைப்படம் ராட்சசன். இத்திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, பல விருதுகளையும் வாங்கியது.

இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விருதுகள் (LAFA) விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த த்ரில்லர், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளின் கீழ் ராட்சசன் திரைப்படம் அள்ளி குவித்துள்ளது. தமிழ் திரைப்படத்திற்கு வெளிநாட்டில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என திரைத்துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *