பழிவாங்கும் அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை.. அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை..

பழிவாங்கும், அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை. அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-23

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை காவலர்கள் கைது செய்தனர். நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டது குறித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கூறியதாவது:-

பழிவாங்கும், அரசியல் நோக்கத்தில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதால் ஏற்கனவே தந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் தங்களது கருத்தை எச்சரிக்கையுடன் நிதானமாக அளந்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *