மக்களை சந்தித்து மனு வாங்க திமுக எம்.பிக்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை ஆகஸ்ட் 29.

திமுக எம்பிக்கள் அனைவரும் தொகுதி மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், அக்ககட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, பொருளாளர் துரைமுருகன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.கஸ்டாலின், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வகையில் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.பி.க்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நாடாளுமன்ற தேர்தலின்போது
தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற வேண்டும் என்றும் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *