திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிரடி கைது..

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சென்னை ஆலந்தூரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை, மே-23

தி.மு.க. அமைப்பு செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். நீதிபதிகள் நியமனம் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தாழ்த்தப்பட்டோருக்கு நீதிபதி பதவியிடங்கள் கிடைக்க திமுக காரணம் என கூறியிருந்தார். தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யான் குமார் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆலந்தூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *