வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு..

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

டெல்லி, மே-22

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

3ம் கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை (Overseas Citizens of India card holders- OCI) வைத்திருப்போர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட உள்ளனர். இதற்கான சில தளர்வுகளை மத்திய அமைச்சகம் வழங்கியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியக் குடிமகன்’ என்றும் ஓசிஐ கார்டு வைத்திருப்பவர்கள் இந்தியா திரும்ப, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த தளர்வுகள்:

► வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(18 வயதுக்குக் கீழ்) இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

► குடும்பத்தில் இறப்பு உள்ளிட்ட அவசர சூழ்நிலை காரணமாக இந்தியா வர விரும்புவோருக்கு அனுமதி.

► கணவன் – மனைவி இருவரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்து மற்றொருவர் ஓசிஐ கார்டு வைத்திருந்தால் இருந்தால் அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதி.

► இந்தியர்களுக்குப் பிறந்து, வெளிநாட்டில் பயிலும் மாணவர்களும்(18 வயதுக்கு மேல்) இந்தியாவுக்கு வரலாம், அவர்களது பெற்றோர்கள் கண்டிப்பாக இந்தியாவில் இருக்க வேண்டும்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஓசிஐ கார்டு வைத்திருக்கும் இந்தியர்களும் தாயகம் திரும்பும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *