தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 14,753 ஆக உயர்வு..

தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, மே-22

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 569 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில், இன்று தமிழகத்தில் மட்டும் 694 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 92 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மேலும் 4 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று ஒரே நாளில் 846 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,128 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய தேதியில் தமிழகத்தில் மொத்தம் 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 12,653 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 3,85,185 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *