கோவையில் அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்த அமைச்சர் SP வேலுமணி..!

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உண்டு பரிசோதித்து பார்த்தார்.

கோவை, மே-22

கோவையில் கொரோனா தடுப்பு பணிகளில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவும் உயிர் காக்கும் கருவியான வென்டிலேட்டரை, அமைச்சர் வேலுமணி மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினார்.

பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உண்டு பரிசோதித்து பார்த்தார்.

இதனிடையே, கோவை கரும்புக்கடை பகுதி மக்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். இதேபோல், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கல்லாமேடு பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களாக காய்கறி தொகுப்புகளை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *