தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா?.. எம்.பி.கனிமொழி கேள்வி..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-22

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடியின் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவுகூர்ந்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. ‘கலவரத்தைக் கட்டுப்படுத்த’ எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா ? இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்.

இவ்வாறு கனிமொழி பதிவிட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *