ஜாதி, மதத்தை திமுக உரம்போட்டு வளர்க்கிறது.. வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி..

திமுகவில் ஜாதி, மதத்தை உரம்போட்டு வளர்க்கிறார்கள் என்று பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

சென்னை, மே-22

திமுக துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த வி.பி.துரைசாமி கூறியதாவது ; –

“நான் திமுக வில் நீண்ட காலம் உழைத்தவன்.
கடந்த சில வருடங்களாக அந்த இயக்கம் துவங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து செல்கிறார்கள்.பாஜக முன்னேறிய சமூக மக்களுக்கான கட்சி என்று எங்களுக்கு போதித்து விட்டார்கள். ஆனால், இன்று தான் தெரிந்தது பாஜக அனைத்து மக்களுக்குமான கட்சி. அறிவாலயத்தில் இருந்து கமலாலயத்தில் வந்துள்ளேன். ஜாதி, மதம் இல்லை என்று பேசுகிறார்கள். ஆனால், அங்கு தான் ஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கிறார்கள். நான் பதவிக்காக அலைபவன் அல்ல. இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து விலக காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அண்ணா, பெரியார் இருந்திருந்தால் இதற்கு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

புரட்சிகரமான பொருளாதார கொள்கைகளை அறிவித்து உள்ளார் மோடி. எனவே, இந்தியா இதன் மூலம் வல்லரசாகும்.

பாஜக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்ததுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அருந்ததிய மக்களும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *