சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்கள் இயங்க அனுமதி – தமிழக அரசு
சென்னையை தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயக்கலாம். ஒரு பயணி மட்டுமே ஏற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, மே-22

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி பயணிக்கும் வகையில் நாளை முதல் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்களை இயக்கலாம். காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாம். கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அனுமதி இல்லை.
ஒரே ஒரு பயணியுடன் ஆட்டோக்களை இயக்கலாம். பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஆட்டோவில் கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும், ஓட்டுநர், பயணி என இருவருமே முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த நிபந்தனையில், என்பது உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.