தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது.. மு.க.ஸ்டாலின் அறிக்கை..

தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டுவந்து கழுவினாலும் போகாது. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை இன்னமும் வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை, மே-22

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் சேர்ந்து கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நாட்டுக்கு நிரூபித்த நாள் இன்று! மே 22- தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

இரத்தம் காய்ந்துவிட்டாலும் வடு மாறவில்லை. தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது!

ஆட்சியாளர் கரங்களில் உள்ள ரத்தக் கறையை கடல் நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது!

என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *