இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,18,447ஆக உயர்வு.. இதுவரை 3,583 பேர் பலி..

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 118447 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3583 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லி, மே-22

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நாடு முழுவதும் புதிதாக 6,088 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,18,447-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6088 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 148 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 48,534 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வியாழக்கிழமை 3,234 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கொரோனா நோய்த்தொற்றுக்கு அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் இதுவரை 41,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,454 போ் பலியாகினா். இதேபோல், குஜராத்தில் 12,905 பேரும், தமிழகத்தில் 13967 பேரும், டெல்லியில் 11659 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *