தமிழகத்தில் வரும் 25ம் தேதி விமான சேவையை தொடங்க வேண்டாம்- பிரதமருக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். கொரோனா தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை, மே-22

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், வருகிற 25-ந் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என்று அந்த துறையின் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம் அறிவித்தார். இதன்படி, வரும் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட உள்ளது.

உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவையில் இருந்தும் விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வரும் 25ம் தேதி தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தாக்கம் தற்போது அதிகமாக இருப்பதால், ஜூன் மாதத்திற்கு பிறகு விமான சேவையை தொடங்கலாம் என அந்த கடிதத்தில் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *