சென்னையில் அதிவேகமாக பரவும் கொரோனா.. பாதிப்பு 8,795ஆக அதிகரிப்பு..!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னை, மே-22

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8,795 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,699 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,231 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,032 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *